ஊரவனின் சிந்திக்க வைக்கும் சிறுதுளிகள்!

முன்னைய வாழ் எம்மவர்கள் “கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை” உள்ளத்தோடு, அயலவர்களோடும் சொந்தங்களோடும் உறவாடி வாழ்ந்து வந்தார்கள் என்பதுக்கு பலதரப்பட்ட ஆதாரங்கள் எம்மவர்களுக்கு நன்கு தெரிந்தும், இன்று நாம் அவற்றை தெரிந்தும், தெரியாதவர்கள் போல் உள்மனதில் “கள்ளம் கொண்ட வெள்ளை மனிதர்கள்” போல் வாழ்த்துவருகின்றோம்.

செல்லம்மாக்கவும் கிளியாச்சியும் மனம்விட்டு உண்மையாக பேசிய அக்காலம் இது!!!

என்னடி அக்காள் கனகாலம் கண்டு? ஓமெடி அக்காள் தோட்டத்தில ஒரே வேலையும் வீடுமாய் தான் இருக்கின்றோம், மனுசன் பிள்ளைகள் எப்படியடி அக்காள்? உனக்கு கொஞ்ச குரக்கன் மாவும் மரவள்ளி கிழங்கும் எடுத்து வைச்சிட்டு அயத்துப்போய் விட்டுவிட்டு வந்திட்டேன்!

(கிளியாச்சி)
எண்ணத்தை சொல்ல, அந்தாள் இப்பவும் ஒரே குடியும் குடித்தணுமுமாய் தானடி இருக்கிறார், பெரியவன் ஏதோ படிக்கிறான், நான் தான் தோட்டத்திலை ஒரே மாரடிக்கிறேன். சரியனை சரியனை பின்னேரம் தோட்டத்திலை மாடு கட்டவரும்போது தந்திட்டு போ, நானும் தோட்டத்திலை வேலைக்காரருக்கு தேத்தண்ணி கொண்டு போக போறேன், சரியனை போட்டு வாறன்!

என்று அப்போது உண்மையாக சொன்ன கிளியாச்சி, இப்போது திசைகள் மாறின பறவைகள் போல் எம்மவர்கள், திசை மாறி அடுத்தவரை தள்ளிவிட்டு பணத்துக்காகவும்.சுயநலத்துக்காகவும் பறக்கின்றோம் என்றால் மிகையாகாது.

எம் முன்னவர்கள் தாம் அறுவடை செய்யும் விவசாய பொருள்களை அயலவர்களுக்கும், சொந்தங்களுக்கும் கொடுத்ததும் பரிமாறியும் ஒற்றுமையாகவும், அன்பாகவும் ஒரு ஊர் சார்ந்த கூட்டுக் குருவிகளாக வாழ்த்து வந்தனர். ஆனால் இப்போது ??? ம்ம் விசயத்துக்கு வருவோம்!…………..

ஒரு ஊரின் கூட்டு குருவிகளாக வாழ்ந்த இனம் இன்று வெடிச்சத்தம் கேட்டு திக்கு திசைமாறி,அல்லல்பட்டு சிறகிழந்து பறக்கும் பறவை போல் நாமும் ஆணவம் உட்கொண்ட இனமாக அல்லல்பட்டுக்கொண்டு
பணத்துக்கும் சுயநலத்துக்குமாக பறந்து கொண்டு இருக்கின்றோம்.அன்பு பாசம் நீதி நேர்மை என்ற திசையில் ஓடிய செல்லம்மாக்கா மற்றும் கிளியாச்சியின் வாழ்க்கை மாறி, இப்போது அக்கினியுடன் கூடிய ஆணவம் கொண்ட வாழ்க்கையால் சீரழிந்து கொண்டிருக்கின்றோம்.

கூட்டுக்குருவி போல் இருந்த எமது முன்னோர் வாழ்க்கை, இப்போது சுயலாம் கொண்ட குறுகிய வாழ்க்கை வட்டத்துக்குள் முகமூடி அணிந்த மனித வேடத்துக்குள் புகுந்துள்ளது என்பதை, யாரும் மறுக்க முடியாதொன்றாக ஆகிவிட்டது. ஆகவே கள்ளம் கபடம் அற்ற செல்லம்மாக்காவின் வாழ்க்கையும் கிளியாச்சியின் அற்புதமான வாழ்க்கையையும் அனைவரும் வாழ கற்று கொள்ளுங்கள்.

அப்போ -கள்ளம் கபடம் அற்ற வெள்ளை உள்ளம்………..
இப்போ – கள்ளம் நிறைந்த வெள்ளை உள்ளம்……………..

-ஊரவன்-