பாதுகாப்பு அங்கி அணியாததாலேயே 6 மாணவர்கள் உயிரிழந்தனர் – ஏனைய மாணவர்கள்!

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் உயிரிழந்த மாணவர்கள் பாதுகாப்பு அங்கி அணியாததாலேயே உயிரிழந்தனர் என குறித்த மாணவர்களுடன் படகுச் சவாரி சென்ற ஏனைய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,

நேற்று உயர்தரப் பரீட்சையின் முக்கிய பாடங்கள் நிறைவடைந்த நிலையில் மாணவன் ஒருவனின் பிறந்த நாள் நிகழ்வைக் கொண்டாடுவதற்காக 18 மாணவர்கள் படகுச் சவாரிக்குச் சென்றனர்.

இவரிகளில் குறித்த படகில் பயணித்த ஏழு மாணவர்களும் பாதுகாப்பு அங்கியை அணியாது படகுச் சவாரியில் ஈடுபட்டனர்.

இந்நிலையிலேயே படகு கவிழ்ந்து ஆறு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதில் ஒருவர் நீந்தி வந்து குருநகர் மீனவர்களிடம் விடயத்தைத் தெரியப்படுத்திய நிலையில் மீனவர்களால் நான்கு பேரின் சடல் மீட்கப்பட்டது.

ஏனைய இரு மாணவர்களின் சடலமும் 3 மணி நேர தேடுதலின் பின்னர் கடற்படையினரால் மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவர்களான சீன்னத்தம்பி நாகசுலோசன், லிங்கநாதன் ரஜீவ், ஜெய்சாந்த் தினேஸ், கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவனான தேவகுமார் தனுரதன்,யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலய மாணவனான கோணேஸ்வரன் பிரவீன் மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவன் தனுசன் ஆகிய மாணவர்களே உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை யாழ் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.