வசாவிளான் வடமூலை 28 வருடங்களின் பின்பு இன்று விடுதலை பெற்றது!

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள வசாவிளானின் ஒருபகுதி இன்று 30 ஆம் திகதி இராணுவத்தினரிடமிருந்து விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வசாவிளான் வடமூலை உத்தரிய மாதாகோவிலும் அதன் அருகில் உள்ள றோமன் கத்தோலிக்க தமிழ்கலவன் பாடசாலையும், சுமார் 29 ஏக்கர் காணியும் இன்று 30 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு உத்தரிய மாதா கோவிலில் இடம் பெற்ற நிகழ்வை தொடர்ந்து, யாழ்மாவட்ட தளபதி மேஜர் ஜெனரல் கெட்டியாராச்சியால் யாழ்.அரச அதிபரிடம் கையளித்தார். இந்த விடுதலையானது அவ்வாள் மக்களையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இனிவரும் காலங்களின் இப்படியான விடுதலை மென்மேலும் நடைபெற வேண்டும் என உத்தரி மாதாவை அனைவரும் பிரார்த்திப்போமாக.

இந்த விடுதலைக்காக அயராது உழைத்த அணைத்து அன்பு உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களையும் வசாவிளான் இணையம் சார்பாக தெரிவித்து கொள்கின்றோம்….