வடக்கில் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பில் மைத்திரி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

வலிகாமம் வடக்கில் தற்போதும் இராணுவ பிடியில் உள்ள நிலங்களில் விரைவில் விடுவிக்கப்படுகூடிய நிலங்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுடனான விசேட சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குரும்பசிட்டி மற்றும் பலாலி வீதிக்கு கிழக்கு பக்க காணிகள் தொடர்பில் ஆலோசிக்கப்படடதோடு, தெல்லிப்பளை அச்சுவேலி வீதி விடுவிப்பின் சாத்தியங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு இவை தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவுறுத்தல் வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டது.

மாவட்ட செயலாளர் மற்றும் காணி உத்தியோகத்தர்கள் சுற்றுலா அதிகாரி, ஜனாதிபதி செயலக அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.