வயாவிளான் ஒட்டகப்புல மக்களில் ஒரு தொகுதியினருக்கு குடும்பம் ஒன்றுக்கு தலா 10,000/-ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஒட்டகப்புல மக்களில் ஒரு தொகுதியினருக்கு குடும்பம் ஒன்றுக்கு தலா 10,000/- வீதம் 54 குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த உதவி எல்லா குடும்பங்களுக்கும் இல்லாமல்,சிலர் தவற விடப்பட்டுள்ளதாக அறிகின்றோம். எவராவது உதவ முன்வந்தால் நாம் அவர்களுக்கு உதவக் காத்திருக்கின்றோம்!  ஐந்து இலட்சத்து 40 ஆயிரம் ரூபா 54 குடும்பங்களுக்கு தலா ரூபா10,000/-ரூபா வீதம் வழங்கப்பட்ட து. இந்த திட்டத்துக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் தலா ரூபா 60,000  வீதம்  300,000) கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளிலிருந்து வழங்கினர்.
மற்றும் ஒருஅன்புறவு தமது தாயாரின் நினைவாக ரூபா 60,000 வழங்கினார், எமது அயற்பங்கைச் சேர்ந்த ஒரு உறவு ரூபா 50,000 வழங்கினார்,முருகதாஸ் குடும்பத்தினர் ரூபா 50,000 வழங்கினர் இவர்களுடன் ஒட்டகப்புல மக்கள் ஆசிரியரின் ரூபா 50,000 உதவியும் மற்றும் ஊரின் பெயரில் இயங்கும் வயாவிளான் இணையம் சார்பாக ரூபா 30,000/-ரூபா உதவியோடு மொத்தமாக ரூபா 540,000 ஊர் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது .
முடிந்தவர்கள் உதவினால் தவறவிட்ட உறவுகளுக்கும் உதவுதோடு உதவிய அனைத்து அன்பு உறவுகளுக்கும் இருகரம் கூப்பி எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.