வலிவடக்கின், வயாவிளான், பலாலி, மயிலிட்டி, மக்களின் ஒற்றுமையான ஒருமித்த, தொடர் ஆர்ப்பாட்டமே மண்ணின் விடுதலையை தீர்மானிக்கும் என்பதில் ஐயம் இல்லை!

கிட்டத்தட்ட முப்பத்தாறு வருடங்கள் தாண்டியும் வலிவடக்கின் பல பகுதிகள் இன்னும் விடுபடாமலே உள்ளதாகவும், ஆனால் உயர் பாதுகாப்பு வலயம் என்று அழைக்கப்படும், பலாலி சர்வதேச விமான நிலையம். எந்த ஒரு விதிமுறையும் இல்லாது இயங்கி வருவதை பலராலும் அவதானிக்க முடிகிறது.

ஆண்டின் பின், இன்றுடன் யுத்தம் முடிந்ததே பதினேழு வருடங்கள் ஆகியும். இன்னும் உயர் பாதுகாப்பு வலயம் என்ற ஒன்றை வைத்து, அந்த ஊர் மக்களை அரசாங்கம் அக்கறை கொள்ளாது இருப்பதின், பின் புலங்களை நாம் கொஞ்சம் அவதானிக்க வேண்டும்.

இன்றும் பலரால் பேசப்பட்டு வரும்விடயம் என்னவென்றால், குறிப்பிட்ட ஊர்களில் இப்போதும் இராணுவம் விவசாயம் செய்து வருவதாகவும், விவசாய பொருட்களை தெற்குக்கும் ஏற்றுமதி செய்வதாகவும் ஊடகங்கள் ஊடாக அறிகின்றோம்.

ஆகவே வலிவடக்கு மக்களே! உங்களின் உரிமைக்கான போராடடத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து, உங்கள் உரிமையை அனைவரும், ஒரு குடையின் கீழ் நின்று பெற்றெடுங்கள்.

காலங்கள் கடந்து விட்டது ஆகவே காலத்தை தாமதிக்காமல் இன்றே உங்களுக்கான உரிமைக்கான தொடர் போராட்டத்தை ஆரம்புயுங்கள்.