பத்தாவது ஆண்டில் பயனிக்கும், வயாவிளான் இணையத்தின் ஆதரவில், வெளியானது வயாவிளான் மண் மீட்புக்கான எழுச்சிப்பாடல் பாடல்!

02-08-2026 அன்று நடைபெற இருக்கின்ற வயாவிளான் மண் மீன்புக்கான எழுச்சிப்பாடலை, வயாவிளான் இணையம் சார்பாக வெளியிட்டு வைப்பதில் பெருமை அடைகின்றோம். ஒற்றுமையை மேம்படுத்தி எழுதிய பாடல் வரிகள் வயவை மக்களை மேலும் உற்சாகப்படுத்தும் என்று  நம்புகின்றோம். இந்த பாடல் வரிகள் வயவையூர் த .கருணையின் வரிகளில் எழுதப்பட்டு, தென் இந்தியா பாடகரால் பாடப்பட்டு இசையமைக்கப்பட்டது. மிகவும் குறுகிய காலத்தில் எழுதி, உங்களுக்காக வெளியிட்டிருந்தோம். இந்த பாடலுக்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

 பல்லவி:

வயாவிளான் மண்ணை மீட்க, வாருங்கள் நாம் ஒன்று சேர! உரிமை காக்க குரல் கொடுப்போம், ஒற்றுமையால் வெற்றி காண்போம்!

சரணம் 1:

மண்ணின் வாசம் நம் உயிரோடு, மறக்க முடியாத உறவோடு, கைகோர்த்து நாம் நடந்தாலே, காலம் கூட நம்மை வெல்லாதே!

பல்லவி:

வயாவிளான் மண்ணை மீட்க, வாருங்கள் நாம் ஒன்று சேர! வேற்றுமைகள் பாராமல், சகோதரராய் எழுந்து நிற்போம்!

சரணம் 2:

நம் முன்னோர்கள் வாழ்ந்த மண்ணே, நம் பிள்ளைகள் காணும் பொன்னே, உரிமை கேட்க வந்திருக்கோம், உறுதியோடு குரல் கொடுப்போம்! முடிப்பு: வயாவிளான் மண் எங்கள் அடையாளம், அதை காப்பது எங்கள் கடமை! ஆகஸ்ட் இரண்டாம் தேதி, அனைவரும் ஒன்றாய் திரள்வோம்! வெற்றி நமதே! வெற்றி நமதே!

பாடல் வரிகள் வயவை கருணை