பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு 100 கோடி ரூபா!!

பலாலி விமான நிலையத்தை 100 கோடி ரூபா செலவில், அபிவிருத்தி செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பலாலி பிரதேச உள்ளுராட்சி அமைப்புக்கள், இருக்கும் நிதியினை கொண்டு வானூர்தி நிலையத்தை முழு அளவிலான சிவில் வானூர்தி நிலையமாக மாற்ற வேண்டும் என வானூர்தி அதிகார சபையின் இயக்குநர் நாயகம் எச் எம் சீ நிமால் ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த அபிவிருத்தி பணி தொடர்பாக இந்திய அரசாங்கத்தை கோரியுள்ள போதிலும் உரிய பதில் எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.