வயாவிளான் கிராமத்தவா்களின் தபாலகமாக ஆரம்பத்தில் “உப தபால் நிலையம்” வயாவிளான் சந்தியில் உள்ள தனியாா் வீடு ஒன்றில் இயங்கி வந்தது.

பலாலி,வயாவிளான் கிராமத்தவா்களின் தபாலகமாக ஆரம்பத்தில் “உப தபால் நிலையம்” வயாவிளான் சந்தியில் உள்ள தனியாா் வீடு ஒன்றில் இயங்கி வந்தது.அக் காலப்பகுதியில் திரு சரவணமுத்து அவா்கள் உப தபால் அதிபராக கடமையாற்றி வந்தாா்.பாாிய நிலப்பரப்பினை உப தபால் அலுவலகம் கொண்டதாகவும் ,பலாலி விமான நிலையம்,பலாலி ஆசிாியா் கலாசாலை, பலாலி இராணுவமுகாம், போன்றவற்றின் அரச நிா்வகாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பொதுமக்களின் ஓரே ஒரு ஊடகமாக விளங்கிய தபால் சேவைக்கு வயாவிளான் உப தபால் அலுவலகம் பாாிய சிறப்பினை வழங்கியது.

சொந்த நிலப்பரப்புடன் கூடிய வீடும், காணியும் வயாவிளான் சந்தியில் தபால் நிலையத்திற்கு என வழங்க சட்டத்தரணி திரு.வல்லிபுரம் இராசநாயகம் அவா்கள் செயற்பட்டதனால் உப தபாலகமாக விளங்கிய வயாவிளான் உப தபாலகம், ‘தபாலகமாக‘ தரம் உயா்த்தப்பட்டது.

இதன் பின்னா் 1970களின் பின்னா் ,வயாவிளான் சந்தியில் பலாலி வீதி ஓரமாக சொந்த இடத்தில் தபாலகம் ஆரம்பிக்கப்பட்டது. வயாவிளான் தபாலகத்திற்கு தபாலதிபராக சரவணமுத்து அம்பிகைபாலன் அவா்கள் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

அன்றிலிருந்து இடப்பெயா்வு வரை இயங்கி வந்த தபால் நிலையம், புன்னாலைக்கட்டுவன், உரும்பிராய், மற்றும் நவக்கிாி பகுதிகளில், இயங்கி தனது சேவையினை தொடா்ந்து வந்தது.

பல இடப்பெயா்வுகளின் பின்னா் வயாவிளான் தபாலகம் தற்போது வயாவிளான் மேற்கு j/245 கிராமசேவையாளா் பிாிவுக்குட்பட்ட குட்டியப்புலம் பகுதியில் உள்ள UNDP யினால் கிராம அபிவிருத்தி நிலையத்திற்கு கட்டிக்கொடுக்கப்பட்ட கட்டிடத்தில் இயங்கி வருகின்றது.

தற்போது வயாவிளான் தபாலகத்தினால் மூன்று கிராமசேவையாளா் பிாிவுகள் தவிா்ந்த ஏனைய பகுதிகளுக்கு தபால் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அஞ்சல் திணைக்களத்தின் வடமாகாண பிரதி அஞ்சல் மா அதிபா் என்.இரத்தினசிங்கம் குறிப்பிட்டாா்.

தபால் வழங்கப்படும் பகுதிகள்

வயாவிளான் கிழக்கு ஜே/ 244

வயாவிளான் மேற்கு ஜே/ 245

பலாலி தெற்கு ஜே/ 252

பலாலி கிழக்கு ஜே/ 253

தபால் விநியோகிக்க முடியாத பகுதிகள்

பலாலி மேற்கு ஜே/ 256

பலாலி வடமேற்கு ஜே/ 255

பலாலி வடக்கு ஜே/ 254( பகுதியளவில் இடம் விடுவிக்கப்பட்டுள்ளது)

தபால் குறியீட்டு இலக்கம் – 40245

தொலைபேசி இலக்கம் – 021 320 7752

நடப்பு அஞ்சல் சேவை உத்தியோகத்தா்

news source: vayavilan.lk