வயாவிளான் ஒட்டகப்புலம் அமலோப் மாதா ஆலய புனரமைப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு!

வலிகாமம் வடக்கு வயாவிளான் ஒட்டகப்புலம் அமலோப் மாதா தேவாலய புனரமைப்பு பணிகளுக்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா அவர்களின் கம்பெரலியா நிதி ஒதுக்கீட்டில் 10 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளார்.

வட்டாரத்தில் மக்கள் ஆதரவைப் பெற்று, வட்டாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ப.யோகராசாவின் வேண்டுகோளுக்கு அமைவாக, வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தனின் சிபாரிசுக்கமையவே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவால் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா இந்த வருடத்துக்காகத் தனக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிகளில் கம்பெரலியா, விசேட நிதி, பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்ட நிதி என்பவற்றில் மீள்குடியேற்றப் பிரதேசமான குட்டியப்புலம், வயாவிளான், ஒட்டகப்புலம் ஆகிய பகுதிகளுக்கு ப.யோகராசாவின் வேண்டுகைக்கு மதிப்பளித்து கூடுதலான நிதி ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.