
36 ஆண்டுகள் கடந்தும், வயாவிளான் கிராமத்தின் மையப்பகுதிகளான வயாவிளான் சந்தியும், ஊரின் அடையாளமாகத் திகழும் வயாவிளான் மானம்பராய் பிள்ளையார் ஆலயமும் ஏன் இன்னும் முழுமையாக மக்களிடம் ஒப்படைக்கப்படவில்லை?
போர் முடிந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்டன.
* பலாலி விமான நிலையம் இயங்குவதாக கூறப்படுகிறது.
* யாழ்ப்பாணம் முதல் பலாலி வரை அனுமதியுடன் போக்குவரத்து நடைபெறுகிறது.
* அப்படியிருக்க, மக்கள் காணிகள் ஏன் இன்னும் உயர் பாதுகாப்பு வலயம் என்ற காரணத்தால் தக்கவைக்கப்படுகின்றனவா?
* மக்களின் காணி மற்றும் ஊர் உரிமைக்கான போராட்டம் போதிய வலிமையுடன் முன்னெடுக்கப்படவில்லையா?
* நீண்ட காலப் போராட்டத்தால் மக்கள் சோர்வடைந்துவிட்டார்களா?
* 36 ஆண்டுகளாக ஊரை விட்டு வாழ்ந்ததால், சொந்த மண்ணின் மீதான அக்கறை குறைந்துவிட்டதா?
இப்படியான பல கேள்விகளுடன், உரிமையோடு மக்களாகிய உங்களைத் தேடி வருகிறோம்.
ஒற்றுமையே எங்கள் பலம்!
காணி உரிமையும், ஊர் உரிமையும், வருங்கால சந்ததியினரின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டுமெனில், நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து, ஜனநாயக வழியில் குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது.
எமது நிலம் – எமது உரிமை – எமது எதிர்காலம்!