சத்தியலிங்கம், டெனீஸ்வரன் அமைச்சுக்களுக்கே மீண்டும் விசாரணை – வடக்|கு முதலமைச்சர்!

சுகாதாரம் மற்றும் போக்குவரத்து அமைச்சுக்கள் மீது மாத்திரமே மீண்டும் விசாரணை நடாத்தப்படுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவர்களை விசாரணை செய்வதற்கு புதிதாக ஒரு விசாரணைக் குழு நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், விவசாய மற்றும் கல்வி அமைச்சுக்களுக்கு பொருத்தமானவர்களைத் தெரிவுசெய்வதற்கு அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்றையதினம் தற்காலிகமாக இவ்விரு அமைச்சுப் பொறுப்புக்களையும் வடமாகாண முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.