பலத்த பாதுகாப்புடன் குற்றவாளிகள் போகம்பர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்!

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 7 பேரையும் கண்டி போகம்பர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பில் குறித்த 7 கைதிகளையும் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்துச் சென்றுள்ளனர்.

தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி குறித்த 7 குற்றவாளிகளும் போகம்பர சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்பேற்று அழைத்துச் சென்றுள்ளனர்.

வித்தியா படுகொலை வழக்கில் குறித்த 7 பேருக்கும் நேற்று மரணதண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை விடுதலை செய்யப்பட்ட முதலாம் இலக்க சந்தேக நபர் திருட்டுக்குற்றம் ஒன்றிற்காக மீண்டும் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.