வயாவிளான் சமூகநல அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம் மத்திய கல்லூரியின் வளாகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

வயாவிளான் சமூகநல அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம் அதன் தலைவர் திரு.ம.ஜெகநாதன் தலைமையில் 10.9.2017 அன்று நடைபெற்றது. வலி-வடக்கு மீள்குடியேற்றக் குழு தலைவர் திரு.சஜீவன் சண்முகலிங்கம் விசேட அழைப்பாளராகக் கலந்து உரையாற்றினார். வயாவிளான் மத்திய கல்லுாரி மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைப்பின் கிளை ஒன்றை கொழும்பில் அமைப்பதற்கு சபை அங்கீகாரம் அழித்துள்ளது. கொழும்பில் கணிசமான தொகை வயாவிளான் மக்கள் வசிப்பதும், அவர்கள் அமைப்பின் கூட்டங்களில் பங்குபற்றமுடியாமையாலும், அனேக கொழும்பு வாழ் வயாவிளான் மக்களின் கோரிக்கைக்கு இணங்கவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. கொழும்பை மையப்படுத்தி நடைபெறும் அமைப்பின் செயற்பாடுகளை கொழும்புக் கிளை கவனித்துக்கொள்ள முடியும்.

அடுத்து சில திருத்தங்களுடன் அமைப்பின் யாப்பு சபையால் அங்கீகரிக்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை 11 ஆக மட்டுப்படுத்தப்பட்டதுடன். அமைப்பின் நிர்வாக எல்லையாக ஜே 244,  ஜே245, ஜே 252 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்வாங்கப்பட்டுள்ளது. இதில் ஜே 252 பிரிவு (பலாலி தெற்கு) புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே படைத்தரப்பினரால் உறுதியளிக்கப்பட்ட ஒக்டோபர் மாதத்திற்கு முன்னராக வயாவிளான் விடுவிக்கப்படாத பட்சத்தில் மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களை முன்னெடுப்பதென்றும் தீர்மானிக்கப்படது.

இரண்டு வாரங்களில் ஜனாதிபதியை சந்திப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

புதிய செயற்குழு ஒன்றும் தெரிவுசெய்யப்பட்டது. இதில் இரு பெண் உறுப்பினர்கள் அடங்கலாக 11 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். இச்செயற்குழு இரண்டு வருட காலம் பணியில் இருக்கும்.

புதிய உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

Source: Vayavilan Welfare Society