வயாவிளான் இணையத்தின் ஆதரவோடு அந்த கொடுப்பனவை வழங்கிய உறவுக்கு எமது வாழ்த்துக்கள்!

வயாவிளான் இணையத்தின் ஆதரவோடு, பிறநாட்டில் வாழும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு நல்ல உள்ளம் தங்கள் பிள்ளையின் பிறந்த நாளை முன்னிட்டு பத்தாயிரம் இலங்கை ரூபாவை எமக்கு அனுப்பி வைத்தார்.

அந்த தொகையை எமது ஊர் சார்ந்த உறவுகளின் வாழ்வாதாரத்துக்கு உதுவும் படி கேட்டு கொண்டதுக்கு இணங்க, கணவரை இழந்த ஒருவருக்கு வயாவிளான் இணையத்தின் உறுப்பினர் திரு மணிவண்னன் மற்றும் தினேஷ் மற்றும் அனுரா தலைமையில் இக்கொடுப்பனவு வழங்கப்பட்டது. அந்த கொடுப்பனவை வழங்கிய அந்த உறவுக்கு வயாவிளான் இணையம் சார்பான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும். இப்படிப்பட்ட கொடுப்பனவுகளை உங்களின் நல்ல நாள் பெருநாள்களில் அனைவரும் செய்து ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போமாக.

நன்றி