வயவை மண்ணுக்கு பெருமை சேர்க்கும் செல்வன் ஜெனோசன்- ஜேர்மனி

வயவை மண்ணை பூர்விகமாக கொண்ட ஜெனோசனின் தாய் தந்தையினர், எமது மண்ணின் இடப்பெயர்வு காரணமாக புலம்பெயர்ந்து ஜெர்மனியில் தங்கள் வாழ்க்கை பயணத்தில் ஆரம்பித்தனர்.

கால ஓட்டத்தில் முப்பது ஆண்டுகளாக இருள்சுழந்த வயவை மண்ணின் பெருமை, இளைய தலைமுறையால் பன்னாடுகளில் துளிர்விட்டு பேணப்பட்டு வளர்த்தெடுக்கப்படுகின்றது.அவ்விதத்தில் வயாவிளானுக்கு புகழ் சேர்த்த வரிசையில் ஜெர்மனியில் வசிக்கும் குத்துசண்டை வீரரான செல்வன் ஜெனோசனும் ஒருவராவார்.

அவரது மனவலிமையாலும்,கடின உழைப்பினாலும் 2015 இல் ஜெர்மனியின் சாம்பியனாக திகழ்ந்தார்.குறுகிய நேரத்தில் எதிராளியை தடம்பிரள வைக்கும் இவரின் வெற்றிப்பயணம் பல தடைகளை உடைத்து ஜெர்மனிக்கும் எமது மண்ணுக்கும் புகழ்சேர்க்க வேண்டும் என்று முதன்மை இணையம் வயாவிளான் இணையம் சார்பாக வாழ்த்துகின்றோம்.