வயாவிளான் மத்திய கல்லூரியில்,வாய்க்கணக்கு வித்தகர் அமரர் நாகமுத்துவின் நினைவாக சூரிய கல மின்னிணைப்புத் தொகுதி!

வாய்க்கணக்கு வித்தகர் அமரர் பொன்னர் நாகமுத்துவின் நினைவாக சூரிய கல மின்னிணைப்புத் தொகுதி, வயாவிளான் மத்திய கல்லூரியில் இணைக்கப்பட்டுள்ளது.

அமரர் பொன்னர் நாகமுத்து மற்றும் அவரது துணைவியார் நாகமுத்து சின்னம்மா ஆகியோரின் நினைவாக, அவர்களது பிள்ளைகளினதும்,பேரப்பிள்ளைகளினதும் 550000 இலங்கை ரூபாய் பெறுமதியான அன்பளிப்போடு, வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்களின் நேரடி நெறிப்படுத்தலில் இவ்திட்டம் மிகவும் சிறப்பான முறையில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பங்கெடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் வயாவிளான் இணையம் சார்பான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.