மீண்டும் வயவைக்கு புகழ் சேர்க்கும் அஜித் ஜெனோசைனை வயாவிளான் இணையம் பாராட்டி வாழ்த்துகின்றது!

வயவைக்கு புகழ் சேர்க்கும் அஜித் ஜெனோசைனை வயாவிளான் இணையம் பாராட்டி வாழ்த்துகின்றது!
Mr. Ajith Jenosan.

வயாவிளான் ஒட்டகப்புல மண்ணின் புதல்வன் செல்வன். அஜித் ஜெனோசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (25-03-2018) ஜேர்மனி Lubeck நகரில் நடைபெற்ற ” K1 warriors fighter of the night” என்ற மாபெரும் குத்துச் சண்டைப் போட்டியில் பங்குபற்றி சம்பியன் பட்டம் வென்றுள்ளார். கடந்த பல வருடங்களாக பல வெற்றிகளுக்கு சொந்தக்காரனான இவர் எம் மண்ணுக்கும் , தமிழ் இனத்துக்கும் , வயாவிளான் மக்களுக்கும் பெருமை சேர்த்து வருகின்றார் . இவரது வெற்றிகள் சர்வதேச அளவில் தொடர எமதூர் குல தெய்வங்கள் அணைத்திடமும் எமதூர் மக்கள் வரம் வேண்டி வாழ்த்தி நிற்கின்றனர் .