வயாவிளான் வடமூலை வளம் கொழிக்க அருள் உத்தரி மாதா கொலுவிருப்பாள்!

கடந்த மூன்று தசாப்தங்களாக வலி சுமந்த எமது வடமூலை மண்ணும், உத்தரி மாதா ஆலயமும் வளம் பெறுவதை புகைப்படத்தில் பார்க்கும் போது மனம் ஆனந்தம் அடைகின்றது.”வயாவிளான் வடமூலை வளம் கொழிக்க அருள் உத்தரி மாதா கொலுவிருப்பாள்”, என்பது அதன் அருகே உள்ள ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின், பாடசாலை கீதத்தின் ஓரிரு வரிகளாகும். ஒவ்வொரு காலையும் பாடசாலை ஆரம்பம் ஆவதுக்கு முன்பு, வெள்ளை நீலம் கலந்த உடுப்பில் அனைவரும் வரிசையாக எமது அதிபர் முன்னிலையில் நின்று அந்த பொன்னான  வார்த்தையை இசைப்பது இன்றும் எம் அடிமனதில் ஆழமான நினைவாகவுள்ளது.

எமது பாடசாலையும் நாம் ஓடி விளையாடிய அந்த உத்தரி மாதாவின் ஆலயச் சுழலும் மென்மேலும் வளர, உத்தரி மாதா எப்பவுமே எங்களுடன் துணையிருக்க வேண்டும் என்று  அங்கு கல்வி பயின்ற  பழைய மாணவன் சார்பில் பிரார்த்திக்கின்றோம்.