வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தின் பாலஸ்தாபன கும்பாபிஷேக அழைப்பிதழ்! 27.08.2018 திங்கட்கிழமை.

அன்பின் வைரவப்பெருமானின் மெய்யடியார்களே!

ஸ்வஸ்திஸ்ரீ விளம்பி வருஷம் ஆவணி மாதம் 11 ஆம் நாள் 27 .08 .2018 திங்கட்கிழமை பிரதமை திதியும்,சதய நடசத்திரமும், சித்தயோகமும் கூடிய சுபவேளையில் ஞான வைரவர்ப் பெருமானுக்கும்,பரிவார மூர்த்திகளுக்கும் பிராயச்சித்த அபிஷேகம் நடைபெறவும், மேற்படி ஆலய புனருத்தாரண திருப்பணி வேலைகள் ஆரம்பமாகி நடைபெறவும் ஞானவைரவப் பெருமானின் திருவருள் கைகூடியுள்ளது.

ஆகாவே ஞானவைரவப் பெருமானின் பக்த அடியார்கள் யாவரும் வருகை தந்து அபிஷேகபூசை நிகழ்வுகளைக் கண்டு, இஷ்ட சித்திகளைப் திருப்பணி கைகாரியங்களில் பங்கெடுத்து, ஞானவைரவப் பெருமானின் பக்தர்கள் அனைவரும் பெருவாழ்வு வாழவேண்டும் என்றும் அனைவரையும் ஆலய பரிபாலன சபையினர் அழைக்கின்றனர்.

27 . 08 . 2018 திங்கள் காலை 9 .00 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகவுள்ளதால் அனைவரும் காலையில் கலந்து கொண்டு பூசைகளின் பலனை பெற்று மதியம் அன்னதான நிகழ்விலும் பங்கெடுத்து செல்லுமாறு அன்போடு அனைவரும் அழைக்கபப்படுகின்றனர்.