அவுஸ்ரேலியா கண்டத்தில் வீசிய வயவையின் மண்வாசனை 2018! (படங்கள் உள்ளே இணைக்கப்பட்டுள்ளது)

கண்டத்தில் வீசிய வயவையின் மண்வாசனையை, வயாவிளான் மக்கள் ஒன்றியம் அவுஸ்ரேலியாவின் வயவை மக்கள் மிகவும் சிறப்பான முறையில் நடத்தியுள்ளனர். கருவானம் இருள் பூண்ட அந்த இயற்கையுடன் சிறிய மழைத்துளிகளின் வரவேற்புடன், எமது தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்கள் மற்றும் பொது மக்களை ஒரு நிமிடம் நினைவு கூர்ந்து  நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டது. கிட்ட தட்ட அறுபதுக்கு மேற்பட்டோர் இந்த நிகழ்சசியில் கலந்து சிறப்பித்ததோடு மட்டும் இல்லாது, பல தரப்பட்ட எதிர் கால செயல்பாட்டு திட்டங்கள் மற்றும் நிர்வாக தெரிவு போன்ற நிகழ்ச்சி நிரல்களோடு பிள்ளைகளுக்கான துடுப்பெடுத்தாட்டம் மற்றும் சங்கீத கதிரை போன்ற பல தரப்பட்ட நிகழ்ச்சிகளுடன் சிறுவர்களும் ஆடிப்பாடி கூடி விளையாடி குதூகளித்தனர்.

வயவையின் மண் வாசனை உலகெங்கும் மனம் வீச வயாவிளான் இணையம் சார்பாகவும் நாமும் அவர்களை வாழ்த்துகின்றோம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தகவல் : அவுஸ்ரேலியா நிருபர்