கங்காருநாட்டு வயவர்களின் கடல்கடந்து வந்த 232200.00/= ரூபாய் உதவித்தொகை!

அவுஸ்ரேலியாவில் வசிக்கும் வயாவிளான் மக்களால் ஊரின் முன்னேற்றத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தை மேன் படுத்த, அவுஸ்ரேலியாவில் இயங்கும் வயாவிளான் மக்கள் ஒன்றியம், வயாவிளான் மக்களின் நலன் கருதி இலங்கையில் உருவாக்கப்பட்ட மீள் எழுச்சிக்கான உதவும் கரங்களுக்கு, இரண்டு லட்சத்தி முப்பத்திரண்டாயிரத்து இருநூறு 232200.00/=  இலங்கை ரூபாவை அனுப்பி வைத்துள்ளனர்.

 

அவர்களுக்கும், அவர்கள் பின்னால் பங்களிக்கும் அனைத்து வயவர்களுக்கும் வயாவிளான் இணையம் சார்பான எமது நன்றிகளை தெரிவித்து கொள்ளுகின்றோம்.

தகவல்: அவுஸ்ரேலியா நிருபர்