அமரர் லயனல் ராஜா

யாழ். வயாவிளான்  ஒட்டகப்புல மண்ணில் பிறந்து, லண்டனில் வசித்த ஓய்வு பெற்ற முன்னாள் விமானி ( Retired Pilot) லயனல் ராஜா நேற்று சனிக்கிழமை ( 12-01-2019) லண்டனில் காலமானார். ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் லண்டனில் வசித்த இவர் புலமைப் பரிசில் பெற்று லண்டனுக்கு புலம் பெயர்ந்தார். ஒட்டகப்புல மண்ணின் முதல் விமானியான இவர் சிறந்த கல்விமானாவார். இவர் எம்மை விட்டுப் பிரிந்தாலும் எம் இதயங்களை விட்டு என்றும் நீங்க மாட்டார். இவர் மறைந்தாலும் இவரது கல்வி, ஆற்றல், சமூக நோக்கு என்பவற்றை கருத்தில் கொண்டு ” கல்வியின் கண் ” என்ற உயரிய விருதினை வழங்கிக் கௌரவிக்கின்றோம். இவரது பிரிவால் துயர் அடைந்திருக்கும் . மனைவி, பிள்ளைகள் , சகோதரர்கள் , உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஒட்டகப்புல மக்கள் தமது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றனர். இவரது ஆன்மா சமாதானத்தில் இளைப்பாறட்டும்.

 

news source: https://www.facebook.com/oddahappulam.makkal