கரம் விளையாடும் போட்டியில் சாதனை படைத்த வயாவிளான் மத்திய கல்லூரி மாணவர்கள்!

வலிகாமம் கல்வி வலயத்தின் வலய மட்ட கரம் போட்டிகள் இன்று இடம்பெற்றன.இதில் வயாவிளான் மத்திய கல்லூரியின் 17 வயது ஆண்கள் பிரிவு அணி பங்குபற்றி இரண்டாமிடத்தை பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மிகவும் நுட்பமான முறையில் விளையாடி எமது பாடசாலைக்கும் பயிற்சியாளர்களுக்கு பெருமை சேர்த்து தந்த அனைத்து வீரர்களுக்கு எமது இணையத்தின் சார்பிலான வாழ்த்துக்களோடு மட்டும் இல்லாது, நடக்க இருக்கும் மாகாண மட்ட போட்டியிலும் வெற்றி வாகை சூடி, எமது பாடசாலைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று இறையருளை வேண்டி நிக்கின்றோம். அததோடு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பக்க பலமாக கரம் கொடுத்த ஆசிரிய குடும்பத்துக்கும் எமது வாழ்த்துக்கள்.