திருமதி யோகம்மா நவரத்தினம்

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், ஆவரங்காலை வசிப்பிடமாகவும் கொண்ட யோகம்மா நவரத்தினம் அவர்கள் 05-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தசாமி, மகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், சுரேஷ்குமார்(கனடா) அவர்களின் பாசமிகு தாயாரும், கனகம்மா, காலஞ்சென்ற தங்கம்மா மற்றும் பொன்னம்மா, சரஷ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்சினி அவர்களின் பாசமிகு மாமியாரும், இனியா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 06-02-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை ஆவரங்காலில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தகவல்:

குடும்பத்தினர்

 

தொடர்புகளுக்கு

 

சுரேஷ்குமார்

 

தர்சினி

 

சுதா

source: https://www.ripbook.com/1209049/notice/100917