வயாவிளான் ஸ்ரீ வேலுப்பிள்ளை பாடசாலை மீண்டும் சொந்த இடத்தில் இயங்க துரித ஏற்பாடு! அங்கஜன் இராமநாதன்.

 

வயாவிளான் மீள் குடியேற்றம் மற்றும் மானம்பராய் பிள்ளையார் ஆலய நிர்வாக குழுவினர், இன்றைய மக்கள் குறைகேள் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களோடு கலந்துரையாடியிருந்ததோடு ,
ஸ்ரீ வேலுப்பிள்ளை பாடசாலை சொந்த இடத்தில் இயங்க ஏற்பாடு செய்து தருமாறும் கோரிக்கையாக முன்வைத்திருந்தனர்.

சொந்த இடத்தில் இயங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு உறுதியளித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் யாழ் மாவட்ட இரானுவத்தளபதியுடன் தொலைபேசியிலும் உரையாடியிருந்தார்.

 

நாடாளுமன்றில் தமது மீள் குடியேற்றத்திற்காக குரல் கொடுத்தமைக்கு நிர்வாகம் சார்பாக நன்றிகளையும் தெரிவித்திருந்தனர்.