13-04-2019 சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சிறப்பாக நடந்த வயாவிளான் மக்கள் ஒன்றியம் ஆஸ்திரேலியா ஒன்றுகூடல்!

13-04-2019 தமிழ் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றுகூடல் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. பல வயவர்கள் அங்கு வாழ்ந்து வருகின்ற போதிலும்,வேலைப்பளுக்கள் காரணமாக அன்றைய நாளில் பலர் கலந்து கொள்ளவில்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் ஊடாக அறிய முடிகின்றது. இந்த ஒன்றுகூடலில் எதிர் காலத்தில் சற்று வித்தியாசமான திட்டங்களை நிறைவேற்றுவது பற்றியும் ஆராயப்பட்டது.

இதே ஆண்டில் 13/01/2019 அன்று பல எதிர் பார்ப்புக்களுடன் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வயாவிளான் மக்கள் ஒன்றியம் சுவிஸில் ஒன்றுகூடலிலும், கிட்ட தட்ட 75 வயவைக்குடும்பங்கள் அங்கு வாழ்கின்ற போதிலும், வெறும் ஐந்து பேர் மட்டும் நடந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதற்கான காரணங்களை எமது நிருபர் அறிய முற்பட்ட போது, தமது ஊர் இன்னும் இராணுவ பிடியில் உள்ளது என்ற மனச்சோர்வும், மற்றும் இலங்கையில் மாதாந்த கொடுப்பனவுகளில் உள்ள சிக்கலாலும் தான், சுவிஸில் நடந்த ஒன்றுகூடலில் பெருமளவில் மக்கள் கலந்து கொள்ளாததத்துக்கு காரணம் என்று அறிய முடிகின்றது.