வரலாற்று கடமைக்கு நாளை வயவைத் தாய் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றாள்!

நாளை 19/04/2019 அன்று, வயாவிளான் மானம்பராய் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த சித்திரை பௌர்ணமி திருவிழா நாளை வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற உள்ளது. அனைத்து வயவை உறவுகளையும் உரிமையுடனும் அழைக்கின்றோம். காலை 9 மணியளவில் அடியவர்கள் அனைவரையும் வயாவிளான் மத்திய கல்லூரிக்கு முன் கூடுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றீர்கள். அன்றய நாளில் ஆலயத்தின் புதிய நிர்வாக சபை தெரிவும் இடம்பெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

குறித்த நிகழ்விற்கு வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ்மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி ஆகியோரும் கலந்து சிறப்பிக்க உள்ளளையால்,உங்களின் பங்களிப்பு வயவையின் விடிவிற்கு பலம்சேர்க்கும் என்பதனை மறவாது, வயவையின் வரலாற்று கடமைக்கு அனைத்து வயவர்களும் ஒன்றாக கைகொடுப்போம் வாருங்கள்.

அன்றய நாளில் காணிவிடுவிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடலும் இடம்பெற உள்ளது. பிறமாவட்டங்களில் இருந்து செல்வோருக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நாளை காலை 6 மணிக்கு தேவிபுரம் பாடசாலையில் இருந்து பேருந்து புறப்பட்டு, பரந்தன் ஊடாக வயாவிளானை சென்றடையும். ஆகவே கிளிநநொச்சி வாழ் எம் உறவுகள் பரந்தன் சந்தியில் காலை 6மணிக்கு ஒன்றுகூடவும்..

காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டடுள்ளது. அனைவரும் தங்களது அடையாள அட்டைகளை தம்முடன் எடுத்துவருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்கின்றனர்.

அந்த நாளில் இலங்கையின் எந்த திக்கிலும் வாழ்கின்ற அனைத்து வயவர்களையும், பாகுபாடு பேதம் இன்றி, வயாவிளான் என்கின்ற அந்த விருட்ஷமான பரந்த குடையின் கீழ் அனைவரும் ஒன்றிணைவோம்.