வயாவிளான் புனித யாகப்பர் ஆலயத்தை,கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மா.வை. சேனாதிராசாவின் மகன் பார்வையிட்டார்!

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மா.வை. சே னாதிராசாவின் புதல்வன் திரு.சே.அமுதன் அவர்கள், எமது ஆலய அருட்பணிச்சபையின் அழைப்பின் பேரில் எமது கிராமத்தினதும் ஆலயத்தினதும் வளர்ச்சி சம்மந்தமாக எமது கிராமத்தை பார்வையிட வருகை தந்து, எமது ஆலயம் மற்றும் கிராமத்தின் அடிப்படை தேவைகள் சம்மந்தமாக பல்வேறு விடயங்களை கலந்துரையாடினார். எமது ஆலயத்தின் போட்டிக்கோ, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மா.வை. சேனாதிராசாவின் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது!!