பலாலி விமான நிலையத்திற்கு செல்லும் பிரதான வீதி கட்டுவன்-மயிலிட்டி வீதியூடாக அமைக்கப்படுகின்றது!

அபிவிருத்தி செய்யப்படும் பலாலி விமான நிலையத்திற்கு செல்லும் பிரதான வீதி, தெல்லிப்பழை சந்தியில் இருந்து கட்டுவன்-மயிலிட்டி வீதியூடாக புனர் அமைக்கப்படுகின்றது.

இவ்வீதி கார்பெட் வீதியாக மாற்றும் பணிகள் ஒரு சில நாட்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறியப்படுகின்றது. தற்போது அளவுப் பணிகள் இடம் பெற்று வருகின்றது.