றீற்ரம்மா பெர்னாண்டஸ் (பச்சைக்கிளி ரீச்சர்) குடும்பத்தினரால்,1.5 பரப்பு காணி அன்பளிப்பாக வழங்கப்பட்டது!

றீற்ரம்மா பெர்னாண்டஸ் (பச்சைக்கிளி ரீச்சர்) குடும்பத்தினரால் 23.05.2015 இல் “சென் ஜேம்ஸ் முன்பள்ளி” அமைப்பதற்கு 1.5 பரப்பு காணி அன்பளிப்பாக வழங்கப்பட்டமை யாவரும் அறிந்ததே.
எனினும் அன்பளிப்பு செய்தவரின் ஒரு நினைவுக்கல்லும், உருவப்படமும் வைப்பதில் காலதாமதமும், அனுமதிகள் பெறுவதில் பல இடர்பாடுகளும் காணப்பட்டன.

எனினும் கடந்த மாதம் ரீச்சரின் மகள் “பொலின் பெர்னான்டஸ்” (பொலின் அக்கா) அவர்களை தொடர்பு கொண்டு, விடயத்தை விளங்கப்படுத்தியவுடன், எதுவித மறுப்புமின்றி இன்று 23.04.2024 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு எமது முன்பள்ளிக்கு வருகை தந்து,
தாயாரின் நினைவுக் கல்லையும், உருவப் படத்தையும் திரைநீக்கம் செய்து வைத்தார்.
என்னுடன் சேர்ந்து ஒத்துழைப்பு நல்கிய சனசமூக நிலைய உறுப்பினர்கள், மற்றும் முன்பள்ளி ஆசிரியருக்கும் எமது உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றிகள்.