
முப்பது வருடம் கடந்தும் இன்னும் வயாவிளான்ஊர் விடுபடவில்லை என்று, அன்றாடம் முகநூலில் புலம்பும் இந்த ஊர் பற்றாளன் போல் அனைத்து வயாவிளான் மக்களும் ஒன்றிணைந்து இந்த தம்பி போன்று, முகநூலில் புலம்பினால் எமது ஊர் முழுமையாக விடுபட சாத்தியம் உள்ளதாக முன்னாள் அரசியவாதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில் நுட்ப உலகில் விளம்பர பலகை போன்று தினமும் உங்கள் உங்கள் முகநூலில் இந்த ஊர் பற்றாளன் போன்று நீங்களும் செயல்பட்டால், ஒரு நேரம் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை வரைக்கும் அந்த பதிவு சென்று, ஐக்கிய நாடுகள் சபையில் இதை பற்றி கதைப்பதுக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டி காட்டினார். ஆகவே இந்த ஊர் பற்றாளன் போன்று நீங்களும் செயல்படுமாறு முன்னாள் அரசியல்வாதி அனைவரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்!