
நேற்றைய தினம் பலாலி கிழக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு வருகை தந்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்
க. இளங்குமரன் அவர்கள், பலாலி கிழக்கு காணிகள் விடுவிப்பு தொடர்பாக
அங்கு கூடிநின்ற மக்கள் முன் கருத்துக்களை கூறினார்! விரைவில் பலாலி கிழக்கு பகுதியின் காணிகள் விடுவிக்கப்படும் என்ற சாதகமான பதிலை மக்களுக்கு வழங்கியிருந்தார்.
இந்த விஜயத்தின் போது காங்கேசன்துறை தொகுதி NPP அமைப்பாளர் சகோதரர் பிரகாஷ் ,
பலாலி மேற்கு வட்டார NPP பிரதேசசபை உறுப்பினர் க.மனோகரராசா மற்றும் பலாலி தென்கிழக்கு வட்டார NPP வேட்பாளரும் சமூக செயற்பாட்டாளருமான நீ.தினேஸ்குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.
நன்றி :
தமிழ்வின் ஊடகம்