வடக்கு முதலமைச்சரை மாற்ற கிழக்கிலிருந்து வருகிறார் சம்பந்தன்!

வட மாகாண அமைச்சர்கள் இருவரை பதவி நீக்கம் செய்தமையாலும், இருவரை கட்டாய விடுப்பில் அனுப்பியமையாலும் வடமாகாண முதலமைச்சர்மீது தமிழரசுக் கட்சியினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பதவி விலக்குவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இன்று மாலை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குப் பதிலாக அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தை ஏற்கனவே பரிந்துரை செய்தாலும் முக்கிய முடிவெடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று கிழக்கு மாகாணத்திலிருந்து வருகைதரவுள்ளார்.

இரா.சம்பந்தன் வருகைதந்ததன்பின்ன யாழ்ப்பாணத்தில் ,மாட்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சி தலைமையகத்தில் இன்று மாலை இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

ஏற்கனவே சி.வி.கே சிவஞானத்தின் பெயர் முதலமைச்சருக்கு பரிந்துரை செய்யப்பட்டாலும், கட்சியின் தலைவரே இறுதிமுடிவெடுப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.