சி.வி.கே. முத­ல­மைச்­ச­ரா­கும் வாய்ப்பு இன்று மாலைக்­குள் முடிவு தெரி­யும்!

வடக்கு மாகாண சபை­யில் அடுத்­த­டுத்து அதி­ரடி மாற்­றங்­கள் இடம்­பெ­ற­வுள்­ளன. வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனை பதவி நீக்­கு­மாறு கோரும் கடி­தம் ஆளு­நர் குரே­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், புதிய முத­ல­மைச்­ச­ராக சி.வி.கே.சிவ­ஞா­னம் நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் அதி­கம் காணப்­ப­டு­வ­தாக கட்சி வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

புதிய முத­ல­மைச்­சர் மற்­றும் அமைச்­ச­ர­வை­யைத் தெரிவு செய்­வ­தற்­கான கூட்­டம், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் அலு­வ­ல­கத்­தில் இன்று இடம்­பெ­ற­வுள்­ளது. இதில் பங்­கேற்­ப­தற்­காக கிழக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து கட்­சி­யின் பொதுச் செய­ல­ரும் வருகை தர­வுள்­ளார்.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனை பதவி நீக்­கு­மாறு கோரி­யுள்­ள­மை­யால், புதிய முத­ல­மைச்­சர் மற்­றும் அமைச்­ச­ர­வை­யைத் தெரிவு செய்ய வேண்­டிய தேவை எழுந்­துள்­ளது. இதற்­காக இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் உறுப்­பி­னர்­கள், மார்­டின் வீதி­யில் உள்ள கட்சி அலு­வ­ல­கத்­தில் இன்று கூடி ஆரா­ய­வுள்­ள­னர்.

இதன்­போது, புதிய முத­ல­மைச்­ச­ராக, சபை­யின் அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தெரிவு செய்­யப்­ப­டு­வ­தற்கு அதிக வாய்ப்­புக்­கள் உள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.