முடிந்தால் தேர்தலுக்கு வாருங்கள் : விக்கிக்கு சவால் விடும் சின்னகதிர்காமர்(காணொளி)

வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் கட்சி நிலைப்பாடுகளை தாண்டி செயற்படுவதாகவும் அவருக்கு ஆதரவு உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என சின்னக்கதிர்காமர் தொலைக்காட்சி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

விக்கினேஸ்வரன் வீட்டில் ஒடுங்கிய வீதிக்குள் திரண்ட நூறு பேரை வைத்துக்கொண்டு முதலமைச்சர் தனக்கு மக்கள் செல்வாக்கு உண்டென கருதுவாராக இருந்தால் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சொன்னதைப்போலவே நானும் சொல்கிறேன் முடிந்தால் மாகாணசபையை கலைத்துவிட்டு தேர்தல் ஒன்றை நடாத்தி வெற்றிபெற்று காட்டுவாரா எனவும் சின்னக்கதிர்காமர் சவால் விடுத்துள்ளார்.