அமெரிக்காவில் தமிழர் பாரம்பரிய உடையுடன் விமானம் ஓட்டிய ஈழத் தமிழன்!

தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டியை அணிந்தே விமானம் ஓட்டுவேன் என வாதிட்டு, ஈழத் தமிழர் ஒருவர் அமெரிக்காவில் வேட்டி கட்டி விமானம் ஓட்டி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார்.

‘அகரன்’ என்ற ஏவுகணையை உருவாக்கியவரான, இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ரவிகரன் ரணேந்திரன் என்பவரே இவ்வாறு வேட்டி கட்டி விமானம் ஓட்டியுள்ளார்.

தான் பேசும்போதுகூட பிறமொழி வார்த்தைகளை உள்நுழைய விடாத ரணேந்திரன், அமெரிக்காவில் விண் பொறியியல் ஆய்வுத்துறையில் கல்விகற்று வருகிறார்.

அகரன் ஏவுகணை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ரணேந்திரன், சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் இரவு பகலாக உழைத்து இதனை உருவாக்கியுள்ளதாகவும், இதனைக் கொண்டு மிகவும் திறன்வாய்ந்த ஏவுகணை அளவுகளை எளிதாக உருவாக்கலாமென்றும் குறிப்பிட்டுள்ளார்.