இன்று இரவு இடியுடன் கூடிய கன மழை!! : வானிலை அவதான நிலையம்

இன்று இரவு நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் , தென் , சப்ரகமுவ , மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இவ்வாறு மழைப் பெய்யக்கூடும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.

அதேபோல், வடக்கு , கிழக்கு , வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை வேளையில் இடியுடன் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் , மேல் , சப்ரகமுவ , மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பிரதேசங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் பனிமூட்ட காலநிலை எதிர்ப்பார்க்கப்படுவதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் , இடியுடன் கூடிய மழை பெய்யும் போது குறித்த பிரதேசங்களில் தற்காலிக கடும் காற்று வீசக்கூடும்.

இந்நிலையில் , மின்னல் தாக்கதால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்த்துக்கொள்வற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை அவதான நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.