வயாவிளான் தூய யாகப்பர் ஆலய பாடகர் குழு பாடல் போட்டியில் முதல் இடத்தை பெற்றுள்ளது!

இன்றைய தினம் யாழ் இளையோர் ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட கிறிஸ்துமஸ் பாடல் போட்டியில் யாழ் மாவட்டத்தில் இருந்து 12.பங்கு ஆலயங்கள் பங்கு பற்றியிருந்த போட்டியில் எமது வயாவிளான் தூய யாகப்பர் ஆலய பாடகர் குழு முதல் முறையாக பங்கு பற்றி முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த குழுவில் பங்கு பற்றிய அனைவருக்கும் வயாவிளான் இணையம் சார்பாக எங்களினதும் வாழ்த்துக்களும் பாராட்டுகளையும் தெரிவித்து  கொள்ளுகின்றோம். இப்போட்டியினை ஒழுங்கு செய்த யாழ் கிளி முல்லை மறைமாவட்ட இளைஞர் ஒன்றியத்திற்கும் எமது ஆலயம் சார்பாக இவ் போட்டியை ஒழுங்கு படுத்தியவருக்கும் இதற்கு பாடல் வரிகள் எழுதியவருக்கும் மெட்டு அமைத்தவருக்கும் இசைக்கருவிகள் மூலம் இசை வழங்கியவர்களுக்கும் பாடலை அழகாக அர்த்தமாக பாடிய எமது பாடகர்களுக்கும் ஆக்கமும் ஊக்கமும் உற்சாகமும் தந்த எம் பங்குத்தந்தைக்கும் உதவி பங்குத்தந்தைக்கும் மற்றும் அனைத்து பங்கு மக்களுக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும் மற்றும் வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் ! எல்லா புகழும் இறைவனுக்கே “”நீதியும் நியாயமும் கிடைத்திடவே எழுந்திடு மனமே எழுந்திடு””

பாடல் வரிகளில் சில………………

“இளையோர் நாமே இறைவனின் ஒளியியல் மாறிடுவோமே மாற்றத்தை நோக்கி துன்பம் தொலைந்தோடுதே கண்ணீர் கரைந்தோடுதே யாவும் புதிதாகுமே மறையோன் புது வரவிலே.