வயாவிளான் இணையத்தின் ஆதரவில் இன்று சுதந்திரபுரத்தில் நூறுக்கு மேற்பட்டவர்களுக்கு புதிய உடுபுடவைகள் வழங்கப்பட்டது!

வயாவிளான், சுதந்திரபுரத்தில் இன்று புது வருடத்தை முன்னிட்டு வயாவிளான் இணையம் மற்றும் ஸ்ரீ கணேஷ் செலக்சன் (சிட்னி ஆஸ்திரேலியா) ன் ஆதரவில் நூறுக்கு மேற்பட்டவர்களுக்கு புதிய உடுபுடவை மற்றும் விளையாட்டு பொருட்களை சிறியோர், பெரியோர்களுக்கு வயாவிளான் இணையத்தின் புனர்வாழ்வு பிரிவினர் பகிர்ந்து அளித்துள்ளனர்.

இந்த நிகழ்வு, எமது செய்திச்சேவையாளர் மணிவண்ணன் மற்றும் தினேஷ் தலைமையில் இனிதே நடந்து நிறைவேறின. இவ்திட்டத்தினை இனிதே நடைபெற உழைத்த ஸ்ரீ கணேஷ் செலக்சன் சிட்னி ஆஸ்திரேலியா நிறுவத்தினருக்கும் ,மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து எமக்கு  உடுபுடவைகளை  இலங்கைக்கு அனுப்ப உதவிய “லங்கா கார்க்கோ” நிருவத்தினருக்கும், மற்றும் வயாவிளான் இணையத்தின் செயல்பாட்டாளர்களுக்கும் எமது இணையம் சார்பாக சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இன்னும் மேலதிகமாக உள்ள ஐம்பது உடுபுடவைகள் மற்றும் விளையாட்டு பொருட்களும் நாளை திடர்ப்புலத்தில் உள்ள உறவுகளுக்கு வழங்கப்படும் என்று எமது செயல்பாட்ட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கான ஆதாரத்தை நாளை பதிவேற்றம் செய்கின்றோம்.

“ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்”