வயாவிளான் புனித யாகப்பர் ஆலய புனரமைப்புக்கு, அனைவரும் உங்களால் ஆன பங்களிப்பை செய்துதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம் !

எமது ஆலய பங்கு மக்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம். ஏறக்குறைய 25 வருடங்களாக நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் எமது நிலங்கள் ஆலயம் என்பன அகப்பட்டு இருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் 20.03.2015 ஆம் ஆண்டு எமது ஆலயம் மற்றும் நிலங்களில் ஒருபகுதி மீள் குடியேற்றத்திற்காக விடப்பட்டது. இவ்வாறு விடப்பட்ட எமது ஆலயத்தின் ‌கூரைகள் எதுவும் இன்றி தனியே கட்டடம் மட்டுமே காணப்பட்டது. பின்னர் எமது ஆலயத்தை சேர்ந்த ‌பல்வேறு இடங்களிலும், வெளிநாடுகளிலும் வாழும் எமது ஆலயபங்கு மக்களின் ‌உதவியுடன் எமது ஆலயத்தின் கூரை வேலைகள் மற்றும் இரண்டு கை விறாந்தை வேலைகள் மின்சார வேலையின் ஒரு பகுதி ,வர்ணப்பூச்சு , கதவுவேலைகள் ஆலய மணி பொருத்தப்பட்டமை மற்றும் குழாய் கிணறு அடித்து கான் பம் பூட்டியமை என்பன நிறைவடைந்து உள்ளது.அதற்கு நிதி உதவி மற்றும் சரீர உதவிகளை வழங்கிய அனைத்து பங்கு மக்களுக்கும் மற்றும் முன்னைய நிர்வாகதினருக்கும் எமது நன்றிகள் ‌.எமது ஆலயத்திற்கு இன்னும் ‌பல முக்கிய வேலைகள் இன்னும் ‌செய்ய வேண்டி உள்ளது அதில் குறிப்பாக திருப்பண்ட காப்பறை அமைத்தல், நிலம் கொத்தி இழுத்தல், முன் ‌போட்டிக்கோ அமைத்தல் , சுற்று மதில் அமைத்தல் , நீர்த்தாங்கி அமைத்தல் , அறைவீடு அமைத்தல் , போன்ற பாரிய வேலை திட்டங்கள் காத்திருக்கின்றன இவற்றை நாம் படிப்படியாக செய்து முடிக்க வேண்டும் அதற்குரிய முயற்சிகளில் தற்போதைய நிர்வாகம் மிகவும் கடுமையான ‌முயற்சியில் இறங்கிஉள்ளது. சில ‌உதவும் மனப்பான்மை ‌உடையவர்கள் எமக்கு உதவி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளனர். இருந்தும் எமது ஆலய அபிவிருத்திக்கு அவர்களின் ‌பங்களிப்பு மட்டுமே போதாது. எனவே எமது மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு ஆலயம் அபிவிருத்தி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது ‌எனவே எமது ஆலயத்தின் வளர்ச்சிக்காக உதவி செய்ய விரும்பும் எமது பங்கு மக்கள் வெளிநாடு வாழ் பங்கு மக்கள் அனைவரிடமும் உங்களால் ஆன உதவிகளை எதிர்பார்கின்றோம். உலகில் எங்கு சென்றாலும் எமது முகவரி எம் ஆலயம் மட்டுமே இது தான் நமது அடையாளம் . உதவி செய்ய விரும்புபவர்கள் எமது ஆலய பங்கு தந்தை நிர்வாகத்தினர் மற்றும் ‌இவ் Facebook messenger மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். நீங்கள் வழங்கும் உதவிக்குரிய பற்றுச்சீட்டு மற்றும் வேலைத்திட்டத்திற்குரிய bill மற்றும் கணக்கு அறிக்கைகள் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதை ‌உண்மையுடன் தெரிவித்து கொள்கின்றோம். ஆகவே அனைவரும் தங்கள் பொன்கைகளால் அள்ளி வழங்கி, இறைவனின் அன்பு கடலில் மூழ்கி பற்றிக்கொள்ளுங்கள்.

“கடல் கடந்து ‌சென்றாலும் தீ நடுவே நடந்தாலும் உன்னோடு நான் இருப்பேன் அஞ்சாதே கலங்காதே “…….