வயாவிளான் மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழா 16-01-2018 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது!

வலிகாமத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் யாழ் வயாவிளான் மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும்,நிறுவனர் சிலை திறப்பு விழாவும் 16 -01 -1028 அன்று செய்வாய்க்கிழமை, ஆ. சி . நடராசா அரங்கில் கல்லூரியின் அதிபர் வே. த.ஜெயந்தன் தலைமையில் இனிதே நடைபெற்றது.

இந்த விழாவில் யாழ். யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராகவும், வலிகாமம் கல்வி பிரதிக் பணிப்பாளர் நா. காண்டீபன் சிறப்பு விருந்தினராகவும் , ஓட்டிசுட்டான் உதவிப் பிரதேச செயலர் செல்வி இ .ஜெகநாதசர்மா மற்றும் தெல்லிப்பழை கோட்டக்கல்வி அலுவலர் மா.ஆனந்தகுமார் ஆகியோர் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.