வயாவிளான் மக்களின் வாழ்வாதாரத்திற்கும், கல்விக்கும் புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் பலவிதத்திலும் உதவிசெய்து வருகின்றார்கள்.

வயாவிளான் மக்களின் வாழ்வாதாரத்திற்கும், கல்விக்கும் புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் பலவிதத்திலும் உதவிசெய்து வருகின்றார்கள். அவ்வழியில் vayavilan.net இணையம் பல மனிதாபிமான உதவிகளைச் செய்து வருகின்றது. அண்மையில் அவ் இணையம் சார்பாக சுவிஸில் வாழும் திரு இளங்குமரன் தம்பிராசா அவர்கள் இரு பெண்பிள்ளைகளுக்குத் தலா 18000/= ரூபாக்களை அவர்களின் கல்விக்காக உதவித் தொகையாக வழங்கி உள்ளார்.

இவ்வுதவி ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொரு மாதமும் தலா 1500/= இலங்கை ரூபா அடிப்படையில் எமது இணைய சகோதரர்கள் அனுரா ,தினேஷ் மற்றும் மணிவண்ணன் ஊடாக உரியவர்களுக்கு வழங்கப்படும். இருவருக்குமான வருடத் தொகை 36000/= ரூபாவை முழுமையாக அனுப்பி வைத்த அந்த அன்பு உள்ளத்துக்கு எமது இணையம் சார்பாக மனமார்ந்த நன்றிகள். இப்படிப்பட்ட உதவிகளை அனைவரும் செய்து ஏழைகளின் சிரிப்பில் இறைவனை கண்டுகொள்வோமாக!