கனடா நலன்புரி சங்கம் மற்றும் கனடாவால் வயாவிளான் மக்களுக்கும் எம் வாழ்த்துக்கள்.

புலம்பெயர்ந்து வாழும் வயாவிளான் மக்களின் பங்களிப்புடன், வாழ்வாதார மற்றும் வறுமை பட்ட மாணவர்களின் கல்விக்கான கொடுப்னவுகளை “வயாவிளான் மீள்எழிச்சிக்கான உதவும்கரங்களின் ஊடக செய்து வருவதினை அனைவரும் அறிவீர்கள்.

அந்த வகையில் வயாவிளான் மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் ,வயாவிளான் மக்கள் ஒன்றியம் ஆஸ்திரேலியா ,வயாவிளான் மக்கள் ஒன்றியம் சுவிஸ், போன்ற அமைப்புக்களை தொடர்ந்து , வயாவிளான் நலன்புரிச்சங்கம் கனடா 200000/= இலங்கை ரூபாவை, உதவும் கரங்கள் அமைப்பினரிடன், கனடா நலன்புரி சங்கத்தின் தலைவர் திரு கதரித்தம்பி சுப்பிரமணியம் அவர்கள் வழங்கியுள்ளார். அவ்வமைப்புக்கு வயாவிளான் இணையம் சார்பாகவும் மற்றும் கனடா வாழ் எமது உறவுகளுக்கும் மற்றும் அப்பணியை சிறப்புற செய்த கனடா நலன்புரி சங்கத்தினருக்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.எம் மண்மேல் நீங்கள் கொண்ட பற்றினாள், மென் மேலும் உங்கள் பனி தொடர வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.