வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தின் இரண்டாம் கட்ட சுத்திகரிப்பு பணிகள்!

அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ள வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தின் முதலாம் கட்ட சுத்திகரிப்பு பணிகள் சென்ற மாதம் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவரும் நிலையில், இரண்டாம் கட்ட சுத்திகரிப்பு பணிகள் வலி.வடக்கு பிரதேச சபையியினால் இன்று (9.7.2018) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கனரக வாகனத்தின் உதவிகொண்டு உள்வீதியில் உள்ள பாரிய அடிமரத்துடனான வேர்கள் அகற்றப்படுவதுடன், முதலாம் கட்ட பணியில் விடப்பட்ட பாரிய மரங்களும் அகற்றப்படுகிறது. இப்பணி தொடர்ந்து வெளிவீதி மற்றும் அண்மித்த பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படும்.

 

 

மீள் பதிவு: -வயாவிளான் வைரவர் முகப்புத்தகத்தில் இருந்து-