வவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் கோரவிபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி!

சம்பவம் பற்றி மேலும் அறியவருவதாவது இன்று காலை(16.09.2018) 10.20 மணியளவில் யாழிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த புகையிரவண்டியானது வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியை அண்மிக்கையில் அப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடைவையில் கடவையை கடக்க முற்பட்ட சிறிய ரக கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது இதன்போது காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேரில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர் ஏனைய நால்வரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் இவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவரும் நிலையில் காரின் சாரதியின் கவணயீனமே விபத்துக்கான காரணம் என பொலிசாரால் தெரிவிக்கப்படுகிறது.