தாகத்தின் உச்சத்தை தொட்ட வயாவிளான் மக்கள் ஒன்றியம் ஆஸ்திரேலியா!

வயாவிளான் மக்கள் ஒன்றியம் ஆஸ்திரேலியாவின் குழாய் கிணறு வேலைத்திட்டம் இன்று இனிதே நிறைவு பெற்றுள்ளது. வட்டக்கச்சி அழகாபுரி இராமாநாதபுரத்தில் வசித்துவரும் நான்கு பிள்ளைகளில், இரண்டு சுகவீனம் உற்ற பிள்ளைகளுடன் கணவரை இழந்து வசித்து வரும் திருமதி சத்தியபாமாக்கு ஒரு குழாய்க்கிணறு அமைத்தும், அதற்கான தண்ணீர் இறைக்கும் இயந்திரத்தையும் பொருத்தி, அவர்களின் பாவனைக்கு உகந்தவாறு ஒரு சிறிய தொட்டியயையும் வயாவிளான் மக்கள் ஒன்றியம் ஆஸ்திரேலியா அமைப்பினர் அமைத்து கொடுத்துள்ளார்கள்.

அவசர உதவியாக சேர்க்கப்பட்ட இந்த நிதி சேகரிப்பில், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் வயாவிளான் மக்களின் ஆதரவோடும் பிற ஊர் சார்ந்த ஒருவரின் ஆதரவோடும் 173510.00 இலங்கை ரூபாய் பெறுமதியான இந்த திட்டத்தை மிகவும் சிறப்பான முறையில் வயாவிளான் மக்கள் ஒன்றியம் ஆஸ்திரேலியா அமைப்பினர் பூர்த்தி செய்துள்ளனர்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்து சிறிய பாத்திரங்களில் நீரை பெற்றுவந்த கணவரை இழந்து , இரு சுகவீனம் உற்ற பிள்ளைகளுடன் வாழ்ந்த அந்த குடும்பப் பெண்ணுக்கு, தானத்தில் சிறந்த தானமாகிய அந்த தண்ணீர் தாகத்தை போக்குவதன் நோக்கமாகவே இந்த திட்டம் எங்களால் மேற்கொள்ளப்பட்டது. இப்போது பல தூரம் சென்று நீரை பெற்று வந்த அந்த குடும்பமும் , தண்ணீருக்காக மிகவும் சிரமப்பட்ட இராமநாதபுரம் அழகாபுரி கிராம மக்களும் இதனால் நன்மை பெற்றுள்ளனர்.

இந்த திட்டம் சிறப்பான முறையில் நிறைவுபெற பல வழிகளில் உழைத்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் மற்றும் இந்த திட்டத்தை தலைமை எடுத்து நடத்திய திரு தயதீஸ்வரன் (குமார்) மற்றும் வயவையூர் திரு மகேந்திரன் (மகான்) அவர்களுக்கும் மற்றும் நேரடியாக அந்த செயல் திட்டத்தை இராமநாதபுரம்
அழகாபுரியில் இருந்து நடத்திய முரசுமோட்டையை சேர்ந்த திரு நந்தகுமார் அவர்களுக்கும் வயாவிளான் மக்கள் ஒன்றியம் ஆஸ்திரேலியின் சார்பில் எமது நன்றியை தெரிவித்து கொள்ளுகின்றோம்.

நன்றி
வயாவிளான் மக்கள் ஒன்றியம் ஆஸ்திரேலியா

 

news source: வயாவிளான் மக்கள் ஒன்றியம் ஆஸ்திரேலியா