வயாவிளான் மத்திய கல்லூரியின் விளையாட்டு போட்டிகள் சிறப்பான முறையில் நிறைவு பெற்றது.(படங்கள் இணைப்பு)

கல்லூரி வளாகததில் அமைந்துள்ள ஆலய தரிசனத்துடனும்,வருகை தந்த சிறப்பு விருந்தினர்களால் குத்து விளக்கு ஏற்றப்பட்டு, கல்லூரியின் பாண்ட்வாத்திய இசையின் முழக்கத்தோடு  நிகழ்ச்சிகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டன.

சக்தி, சாந்தி ,கீர்த்தி ,ஜோதி குறிப்பிட்ட நான்கு இல்லங்களுக்கிடையில் இந்த போட்டிகள் நடைபெற்றன. கல்லூரியின் பாண்ட்வாத்திய அணிக்கு புதிய சீருடையை கனடா நாட்டில் வாழ்கின்ற பழைய மாணவர்கள் தமது முழுமையான நிதிப்பங்களிப்பின் மூலம் வழங்கி இருந்தார்கள். அவர்கள் யாவருக்கும் வயாவிளான் இணையத்தின் சார்பில் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

பாடசாலையின் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் என்று பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்ததும் இங்கு குறிப்பிட தக்கது.