வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் வலிகாமம் கல்வி வலயச் சம்பியனான வயாவிளான் மத்திய கல்லூரி!

யாழ். வலிகாமம் கல்வி வலயத்தின் பாடசாலைகளுக்கிடையே இடம்பெற்ற உதைபந்தாட்ட தொடரில், வயாவிளான் மத்திய கல்லூரியின் 20 வயது பிரிவு ஆண்கள் மட்டத்தில் சம்பியனானது.

இப்போட்டிகள் மாகாஜனா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. அரையிறுதியில் பலம்வாய்ந்த இளவாலை யங்ஹன்றிஸ் அணியை, வயாவிளான் மத்திய கல்லூரி வீரர்களின் திறமையான பனால்டி உதை மூலம் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறியது.

 

இரு பாடசாலைகளுக்கும் இடையில் நடந்த பலமான இறுதியாட்டத்தில், மானிப்பாய் இந்துகல்லூரிக்கு எதிராக வயாவிளான் மத்திய கல்லூரி வீரர் ஹரிஷ் பெற்று கொடுத்த அதிரடி கோல் மூலம் 1- 0 என்ற கோல்கணக்கில் மத்திய கல்லூரி வெற்றி பெற்று சம்பியனாகி மாகாண மட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

 

2014ஆம் ஆண்டிற்கு பின்னர் மீண்டும் கடுமையான பயிற்சிகள் மூலம் எமது கல்லூரி உதைபந்தாட்ட அணி, மாகாண மட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நடக்க இருக்கும் போட்டிகளில் வெற்றி வாயை சூட வாழ்த்துவதோடு மட்டுமில்லாது, பெற்று வந்த வெற்றிகளுக்கு பின்னால் உழைத்த, ஆசிரியர்கள் , விளையாட்டு வீரர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் வயாவிளான் இணையம் சார்பான எமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துக்கொள்கின்றோம்.