ஆலயத்தில் புதிய போட்டிக்கோ‬ அமைப்பதுக்காக,எமதூர் உறவுகளின் உதவியை நாடி நிற்கும் புனித யாகப்பர் ஆலயத்தினர்!

ஆலயத்திற்கு போட்டிக்கோ ஒன்றை அமைத்பதற்கு, அரச நிதியில் இருந்து பத்து இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அவ் நிதி இவ் போட்டிக்கோவை முழுமையாக செய்து முடிக்க போதுமானதாக இல்லை இவற்றின் தூண் கூரை வேலைகளை முடித்து ஒரு அமைப்பிற்கு இந் நிதி மூலம் கொண்டுவர முடியும். முழுமையாக முடித்து லெவல் சீற் அடித்து மின்குமிழ்கள் பொருத்தி எமது ஆலய முன் தோற்றத்தை போன்ற வேலைப்பாடுகளை இவ் போட்டிக்கோவிலும் செய்து வர்ணப் பூச்சு வேலைகளை செய்வதற்கு நிதி போதுமானதாக இல்லை.

 

 

அத்துடன், இவ் வேலை திட்டத்தை முதலில் ஆரம்பித்து ஒரு பகுதியை முடித்தால் தான் கொடுப்பனவை அரச நிதியில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். எனவே இவற்றை கருத்தில் கொண்டு எமது பங்கு மக்களிடம் இருந்து  முக்கியமாகவெளிநாட்டுவாழ்பங்குமக்களிடம்/மற்றும் அமைப்புகளிடம் இருந்தும், இந்த நிதி உதவிகளை எதிர்பார்த்து நிற்கின்றோம்! நீங்கள் வழங்கும் நிதிக்குரிய பற்றுச்சீட்டுகள் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதனையும் தெரிவித்துக்கொண்டு இது தொடர்பான கணக்கறிக்கைகளும் தங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.எனவே இவ் நிதியினை விரைவாக வழங்கும் பட்சத்தில் எமது ஆடி மாத திருநாளிற்கு அழகாக அமையப்பெறும் இவ் போட்டிக்கோவில் திருநாள் திருப்பலியை நடார்த்த முடியும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்!! “கிள்ளிக் கொடுங்கள இறைவன் அள்ளித்தருவார் உறவுகளே”.

நன்றி.

-ஆலயஅருட்பணிச்சபையினர்-